2020-21ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை – இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் 10.10.2020 க்குள் வந்து விண்ணப்பிக்கவும்

முதல்வர் அவர்களின் செய்தி அறிக்கை,

இக்கல்லூரிக்கு 2020-21ஆம் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கை நடைபெற்றுவருகிறது. இதுவரை விண்ணப்பித்து சேர்க்கை பெறாதவர்களும், இக்கல்லூரிக்கு இதுவரை விண்ணப்பிக்காதவர்களும் காலியாகவுள்ள பாடப்பிரிவுகளில் சேர, 10.10.2020 காலை 10 மணிக்குள் நேரில் வருகை தந்து புதிய விண்ணப்பங்கள் பெற்று பூர்த்தி செய்து சேர்க்கைக்கான வாய்ப்பைப் பெறலாம். இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

ஏப்ரல் 2020 பருவத் தேர்வுகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

நம் கல்லூரியில் 21.09.2020 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 2020 பருவத் தேர்வுகள் தமிழக அரசு உயர்கல்வித்துறையின் அறிவுறுத்தலின் பேரில் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.

மாணவர்களுக்கான இணைய வழி வகுப்புகள் அறிவிப்பு

தமிழக அரசின் உயர்கல்வித்துறையின் அறிவுறுத்தலின்படி 2020-21 ஆம் கல்வியாண்டு இளநிலை (BA, BSc, B.Com, BBA – II Year, III Year) & முதுநிலை (MA, MSc., – II year, MCA – II & III year) ஆகிய வகுப்புகளுக்கு ஒற்றைப்பருவத்திற்கான இணைய வழி வகுப்புகள் 03.08.2020 திங்கள் முதல் நடைபெற்று வருகிறது. மாணாக்கர்கள் அனைவரும் முழுமையாக online class-ல் பங்குபெற்று பயன்பெறுமாரு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சுற்றறிக்கை

கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படுகிறது.

கல்லூரி, பல்கலைக்கழகத் தேர்வுகள் வரும் கல்வியாண்டின் தொடக்கத்தில் நடத்தப்படும். மாணாக்கர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டும்.

உயர்கல்வித்துறை செயலர் அறிவிப்பு.